இந்தியா, சினிமா

நடிகர் ஷாருக்கானை மிரட்டிய மும்பை தாதா!

chennai express  trailer launch  (19)

மும்பை ஜூகுவில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கரீம் மொரானி, அலி மொரானி சகோதரர்களின் குடும்பத்திற்கு 4 மாடி பங்களா உள்ளது. இந்த வீட்டின் மீது சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், 5 முறை மொரானி குடும்பத்தினரின் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர். நிழல் உலக தாதா ரவி பூஜாரிதான் இந்த சம்பவத்ததுக்கு காரணம் என போலீசார் கூறுகின்றனர். ரவி பூஜாரி தன் பெயர் ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக சமீப காலமாக பிரபல சினிமா பிரபலங்களை மிரட்டி வருகிறார். கடந்த சில மாதங்களாக ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்துக்கான வெளிநாட்டு உரிமத்தை தனக்கு தர வேண்டும் என்று கோரி, மொரானி சகோதரர்களை போனில் மிரட்டினார். அந்த உரிமை தங்களிடம் இல்லை என்று மொரானி சகோதரர்கள் கூறிய போதும் கேளாமல், பூஜாரியின் ஆட்கள் அவர்களுடைய குடும்பத்தினருக்கு போன் செய்து பலமுறை மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில்தான், மொரானி வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.மொரானி சகோதரர்களுக்கு நடிகர் ஷாருக்கான் மிகவும் நெருங்கி நண்பர். தொழில் ரீதியாகவும் நெருக்கமானவர். ஷாருக்கான் நடித்த பல வெற்றி படங்களை மொரானி சகோதரர்கள் தயாரித்துள்ளார்கள். ராஜா இந்துஸ்தானி, தாமினி, துஷ்மனி, ஹம்கோ தும்சே பியார் ஹை உட்பட ஷாருக்கான் நடித்த பல வெற்றி படங்களை தயாரித்துள்ளனர். கரீம், தற்போது தயாராகிவரும் ரா ஒன்னின் செயல் தயாரிப்பாளர். மேலும், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் இணை தயாரிப்பாளர். இதனால் பூஜாரி கோஷ்டியினர் அடுத்து ஷாருக்கானுக்கு குறி வைக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே, போலீசார் முன்னெச்சரிகையாக ஷாருக்கானின் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s