செய்து பாருங்கள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டுத் தோட்டம்

விதவிதமான வடிவங்களில் கான்கிரீட் பூந்தொட்டிகள் செய்முறை!

வீட்டுத்தோட்டத்திற்குப் பயன்படுத்த கான்கிரீட் தொட்டி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்த்தோம். அதே செயல்முறையுடன் வீணான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி கான்கிரீட் தொட்டிகள் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

DSCN0356
இதுபோன்ற யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக் புட்டியின் மேல் பாகத்தை கத்திரியால் வெட்டவும். இதைவிட சிறியதாக இன்னொரு புட்டியை எடுத்துக் கொள்ளவும்.
DSCN0357
புட்டியின் ஒரு பக்கத்தை இப்படி வெட்டவும்.
DSCN0359
புட்டியின் கீழ்பாகம் வரை இந்த அளவுக்கு கோடு போட்டது போல வெட்ட வேண்டும்.
DSCN0361
வெட்டிய புட்டியை இப்படி செலஃபோன் டேப்பால் ஒட்டுங்கள்.

 

DSCN0365
கான்க்ரீட் உலர்ந்த பிறகு பிரிக்க எளிதாக இருக்கும் என்பதால் இப்படி செய்கிறோம்.
DSCN0376
சிமெண்ட், மணல், நீர் சேர்த்து கலவை தயாரிக்கவும். சிமெண்ட், மணல் சமமாக கலக்க வேண்டும். கலவை நீர் ஓடாமல் குறைவாக தண்ணீர் சேர்த்து கலக்கவும். கைகளால் கலக்கினால் கையுறை அணியவும்.
DSCN0394
முதலில் பெரிய புட்டிக்குள் சிறிது கலவை சேர்த்து அடிப்பகுதியை நிரப்பவும். அதன் மேல் சிறிய புட்டியை வைத்து இரண்டு புட்டிகளுக்கும் நடுவே இருக்கும் இடைவெளியில் கலவையால் நிரப்பவும். இதை 2 நாட்களுக்கு அசைக்காமல் ஒரு சமதள பரப்பில் வைத்திருக்கவும்.

 

DSCN0450
2 நாட்களுக்குப் பிறகு இறுகிய கான்கிரீட்டிலிருந்து மெதுவாக பிளாஸ்டிக் புட்டிகளை பிரித்தெடுக்கவும். 2 நாட்களுக்குள் அவசரப்பட்டு எடுத்தால் இதோ படத்தில் இருக்கும் ஒரு தொட்டிபோல பாதி உடைந்த தொட்டி கிடைக்கும். முழுதாக கிடைக்க 2 முழுநாள் கான்கிரீட்டை இறுகவிடுங்கள். மழைக்காலங்களில் இவை இறுக 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s