புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண்களில் பூங்குழலி , ராஜி, பனிமலர் இவர்களைத் தவிர சில பெண்கள் ஸ்டைலாக வாசிக்கிறேன் என்கிற பெயரில் வாயைக் கோணலாக வைத்துக் கொண்டு செய்து வாசிப்பது சகிக்கவில்லை. பெயர் குறிப்பிட்டு அவர்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. நான்கைந்து பேர் அப்படித்தான் வாசிக்கிறார்கள். வாய்க்குள் ஏதோ அடைத்துக்கொண்டு வாசிப்பது போல பார்ப்பவர்களுக்கு சங்கடத்தை தரும் இந்த பாணியை கைவிட்டால் வரவேற்கலாம். பொதிகையில் அழகான உச்சரிப்பில் செய்தி வாசிக்கும் பெண்களை பார்க்கும்போது உண்மையில் அவர்கள்மேல் மதிப்பு கூடுகிறது.
செய்திக்கு வருவோம். கோணல் சேஷ்டைகள் செய்யாமல் செய்தி வாசிக்கும் பனிமலர், புதிய தலைமுறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ‘என் அடுத்த கட்டத்திற்கான மாற்றத்தை நோக்கிய பயணத்திற்கு தயாராகிவிட்டேன். புதிய பாதையை நோக்கி அடுத்த அடி எடுத்துவைக்கிறேன். புதிய தலைமுறையில் இருந்து பணி விலகி என் பயணத்தை நீயூஸ் 7 தொலைக்காட்சியில் தொடரவிருக்கிறேன். அதோடு புதிய தலைமுறையில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் நன்றி’ என்று தன் முகப்பு பக்கத்தில் எழுதியிருக்கிறார் பனிமலர். அவருக்கு வாழ்த்துக்கள்!