சமீபத்தில் வெளியான ஜிகிர்தண்டா படத்துக்கு மனிரத்னம் பாராட்டு தெரிவித்துள்ளார். தன் பாராட்டை தெரிவிக்க படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜை வரவழைத்து தெரிவித்திருக்கிறார் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக கருதப்படும் மனிரத்னம். இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் ‘சினிமா லெஜெண்டான மனிரத்னம் என்னை அழைத்துப் பேசியதை என் வாழ்நாள் பேராக கருதுகிறேன். சினிமா தொடர்பாக இருவரும் நீண்ட நேரம் பேசினோம்’ என்று தெரிவித்தார்.