‘பிகே’ திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி குறித்து, நடிகர் அமீர் கான் வரும் நாளை (ஆகஸ்ட் 25) பதிலளிக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பை நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சர்மா, இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.மேலும், திரைப்படத்தில் உள்ள அந்தக் காட்சி எந்த வகையில் ஆபாசமாக உள்ளது என்பதை மனுதாரர் விளக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல் தாக்கல் செய்திருந்த மனுவில், “நடிகர் அமீர் கான் மீது மக்களுக்கு நல்ல எண்ணம் உள்ளது. எனினும், இதுபோன்ற ஒரு காட்சியில் அவர் நடித்தது, ஏற்கத்தக்கதல்ல. எனவே, “பிகே’ திரைப்படத்தில், அமீர் கான் ஆடையின்றி நிற்கும் காட்சியை நீக்கும் வரை, அந்தப் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.