அரசியல், இந்தியா

பதவி விலகும்படி உள்துறை செயலாளர் மிரட்டல்: ஆளுநர் அஜீஸ் குரேஷி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

anil goswamy2
உள்துறை செயலர் அனில் கோஸ்வாமி

ஆளுநர் பதவியில் இருந்து நீக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை எதிர்த்து உத்தரகண்ட் ஆளுநர் அஜீஸ் குரேஷி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கும், ஆளுநர்களை மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக உள்துறை செயலாளர் கோஸ்வாமிக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவிக்கு வந்ததும், ஐமு கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை பதவி விலகும்படி உள்துறை செயலர் அனில் கோஸ்வாமி கேட்டுக் கொண்டார். அதையடுத்து, எம்.கே. நாராயணன் (மேற்கு வங்கம்), அஸ்வினி குமார் (நாக லாந்து), பி.எல். ஜோஷி (உத்தரப் பிரதேசம்), சேகர் தத் (சத்திஸ்கர்) ஆகியோர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தனர். மிசோரம் ஆளுநர் கமலா பெனிவால், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஆளுநர்கள் பிரச்னையில் முதல் முறையாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரகண்ட் ஆளுநர் அஜீஸ் குரேஷி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, பதவியில் இருந்து விலகும்படி கடந்த ஜூலை 30ம் தேதி மத்திய உள்துறை செயலர் அனில் கோஸ்வாமி  என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். பதவி விலகாவிட்டால் நீக்கப்படுவீர்கள் என்றும் கூறினார். அதையடுத்து ஆகஸ்ட் 2ம் தேதி ஜனாதிபதியை நேரில் சந்தித்து, விளக்க கடிதம் கொடுத்தேன். அந்த கடிதம் உள்துறை அமைச்சருக்கும் அனுப்பப்பட்டது. இந்த மனுவுடன் மூடப்பட்ட உறையில் அந்த கடிதம் நீதிமன்றத்தின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி மீண்டும் தொலைபேசியில் அழைத்த கோஸ்வாமி, பதவியில் இருந்து விலகும்படி மிரட்டினார்.

உள்துறை அமைச்சகமோ, தனது அதிகாரிகள் மூலமாகவோ ஆளுநருக்கு மத்திய அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஆனால், ஒரு அரசு அதிகாரி, பதவி விலக வேண்டும் அல்லது நீக்கப்படுவீர்கள் என்று மிரட்டியுள்ளார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஆளுநர்களை பதவியில் இருந்து நீக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட வேண்டும். மிரட்டல் விடுத்த உள்துறை செயலர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குரேஷி கூறியுள்ளார். முன்னாள் மத்திய சட்ட அமைச்சர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், 2 முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் குரேஷியின் சார்பில் ஆஜராயினர். அரசியலமைப்பு சட்டத்தின் 156வது பிரிவின் கீழ் ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களை பதவி விலகும்படி மிரட்டியது அந்த பிரிவுக்கு எதிரானது என்று அவர்கள் வாதிட்டனர்.

மனுவை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி லோதா தலைமையிலான பெஞ்ச், இது குறித்து 6 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், உள்துறை செயலர் கோஸ்வாமிக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வழக்கு என்பதால் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சட்ட பெஞ்ச் விசாரணைக்கு, இந்த வழக்கு மாற்றப்படுவதாகவும் பெஞ்ச் தெரிவித்தது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s