தமிழில்ட்நேரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா. தொடர்ந்து நய்யாண்டி, ராஜாராணி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் படங்களில் நடித்தார். மலையாளத்தில் எல் பார் லவ் என்ற படத்தில் நடித்த போது பகத் பாசில்-நஸ்ரியா இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதித்து திருமணம் நிச்சயித்தனர். இவர்களின் திருமணம், திருவனந்தபுரத்தில், அல்சாஜ் ஆடிட்டோரியத்தில், இஸ்லாமிய முறைப்படி நேற்று நடந்தது. திருமண நிகழ்ச்சியில் மலையாள திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பகத் பாசில் பிரபல மலையாள இயக்குனர் பாசிலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.