அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

சி.ஆர்.பி.எஃப். வீரர்களே வன்முறைக்கு காரணம்: அஸ்ஸாம் முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு

Tarun gogaiகடந்த வாரம் நாகாலாந்தைச் சேர்ந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அசாமைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகலாந்து எல்லையையொட்டியுள்ள அசாமின் கோலாகட் பகுதியில் 2வது நாளாக பொதுமக்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, ரங்கோஜன் பகுதியில் காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறை போராட்டக்காரர்களை அடக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க முயற்சித்தது. போராட்டம் தொடரவே பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அசாம் – நாகலாந்து எல்லையில் போராட்டம் தீவிரமடைந்ததால், கோலாகட் மற்றும் ரங்கோஜன் நகரங்களில் ஊரடங்கு உத்தரவை காவல்துறையினர் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, பிரச்னையை தீர்ப்பது தொடர்பாக அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து முதலமைச்சர்களுடன் தொலைபேசியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இருவரையும் பேச்சுவார்த்தை நடத்துமாறு அறிவுறுத்தினார்.

முன்னதாக இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய், கலவரப்பகுதிகளில் மத்திய அரசு மூலம் வழங்கப்படும் பாதுகாப்பில் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும், சி.ஆர்.பி.எஃப். வீரர்களே வன்முறைக்கு காரணம் என்றும் விமர்சித்துள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s