அரசியல், இந்தியா, சுற்றுச்சூழல்

விளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ‘கெயில்’ முறையீடு

???????????????????????????????

இயற்கை எரிவாயு விநியோகத் திட்டத்தின்படி, தமிழக விளை நிலங்களில் குழாய்கள் பதித்ததற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால், அவற்றை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ‘கெயில்’ நிறுவனம் கேட்டது. எனினும், “வாய்மொழியாக விடுத்த இந்த வேண்டுகோளை முறைப்படி மனுவாகத் தாக்கல் செய்தால் கோரிக்கை பரிசீலிக்கப்படும்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

கேரளத்தில் இருந்து கர்நாடகத்துக்கு தமிழகம் வழியாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்த ஆண்டு திட்டமிட்டது. அத்திட்டத்தின்படி, தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக நிலத்துக்கடியில் குழாய் பதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. அதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, கெயில் நிறுவனத்துக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பரில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எச்.எல். தத்து, எஸ்.ஏ. பாப்டே அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி ‘குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகத் திட்டம் தமிழகம் மட்டுமன்றி கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்த வேண்டிய மிகப் பெரிய திட்டமாகும். ஆனால், தமிழகத்தில் சில விவசாயிகள் அமைப்புகளும், மாநில அரசும் திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவித்ததால், ஒட்டுமொத்த திட்டத்தையும் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஏற்கெனவே, ஏராளமான இடங்களில் எரிவாயு குழாய்கள் நிலத்தில் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றை நீண்ட காலத்துக்குப் பயன்பாடின்றி வைத்திருக்க முடியாது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் வரை நிலங்களில் பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற அனுமதிக்க வேண்டும். குழாய்களை அகற்ற கெயில் நிறுவனம் தயாராக உள்ளது’ என்றார்.

அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் வெறும் வாய்மொழியாக அளிக்கும் உத்தரவாதத்தை ஏற்க முடியாது. முறைப்படி மனு தாக்கல் செய்து உங்கள் கோரிக்கையை முன்வைக்கவும். அதைப் பரிசீலித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்துக்கு விதித்த தடை நீடிக்கும்’ என்றனர்.

முறையீடு: இதையடுத்து, “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டம் நீண்ட காலத்துக்கு கிடப்பில் வைத்திருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த வழக்கை விரைவில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்’ என்று ரஞ்சித் குமார் முறையிட்டார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “கெயில் நிறுவனம் மனு தாக்கல் செய்தவுடன் விரைவாக இந்த வழக்கை விசாரிக்கிறோம்’ என்றனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s