தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், உடனடி உணவுகள் (ரெடிமிக்ஸ்) தயாரிப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி நாளை (20.08.2014) நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் கோதுமை பருப்பு அடை, அரிசி புட்டு மிக்ஸ், வடை மிக்ஸ், இடியாப்பம் மிக்ஸ், பாயாசம் மிக்ஸ், பிசிபேளேபாத் மிக்ஸ் மற்றும் போண்டா மிக்ஸ் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியானது வீட்டிலிருப்போர் மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.
பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள், பயிற்சி பற்றிய தகவல்கள் மற்றும் பயிற்சி கட்டணத்தை கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்பு முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தகவல் மற்றும் பயிற்சி மையம்
எண்: U-30 10வது தெரு (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்)
அண்ணாநகர்
சென்னை – 600 040.
தொலைபெசி எண் – 044-26263484