இனி மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது… வீட்டுத் தோட்டத்தில் கண்கவர் பூ செடிகளை வளர்க்கலாம். சாமந்தி, செவ்வந்தி, மல்லி என சீசன் செடிகள் பூக்க ஆரம்பிக்கும். இவற்றில் மல்லியைத் தவிர, நர்சரிகளில் விற்பனைக்குக் கிடைக்கும் சாமந்தி, செவ்வந்தி போன்றவை 3 முதல் 6 மாதம் வரை மட்டுமே வெப்பமான சூழ்நிலைகளில் வளரும். இவற்றை அலங்காரத்துக்கென பயன்படுத்தலாம்.
சதுர அல்லது செவ்வக வடிவ தொட்டியில் நான்கு அல்லது மூன்று விதமான சாமந்தி செடிகளை நடலாம். பார்க்க அழகாக இருப்பதோடு, 6 மாதங்கள் வரை வாடாத பூ கொத்துகளாகவும் இவை நம் வீட்டை அலங்கரிக்கும்.
தொட்டியில் நீர் வெளியேறுவதற்கு சரியான துவாரமும் செடிகள் நட உரமும் மண்ணும் கலந்த கலவையும் தேவை. குறைவான சூரிய ஒளி போதுமானது. இவை பொதுவாக குளிர் பிரதேசங்களில் வளரக்கூடியவை என்பதால் அதிகப்படியான வெயில் சாம்ந்தி செடிகளை கருக வைத்துவிடும்.