அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

நீதித் துறையில் அரசியல் தலையீடு கூடாது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

RMLodha

மத்திய சிறைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவும், மாவட்ட சிறைகளில் 72 சதவீதத்துக்கும் அதிகமாகவும் விசாரணைக் கைதிகள் இருக்கின்றனர். குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாமல், வழக்கு விசாரணையின்போதே அதிக காலம் அவர்கள் சிறையில் இருப்பது முரண்பாடாக உள்ளது.

நீதித் துறையின் செயல்பாடுகளில், அரசும், நாடாளுமன்றமும் தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா வலியுறுத்தினார். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் தேர்வுக்குழு (கொலிஜியம்) முறைக்குப் பதிலாக நீதிபதிகள் நியமன ஆணையத்தை ஏற்படுத்துவது தொடர்பான அரசியல் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசியக் கொடியை ஏற்றிவைத்து, ஆர்.எம். லோதா பேசியதாவது:
நீதித் துறை, நிர்வாகத் துறை, நாடாளுமன்றம் ஆகியவை பரஸ்பரம் பிற துறைகளை மதிக்க வேண்டும். தங்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட அதிகாரத்துக்கு உள்பட்டு செயல்படுவதுடன், ஒன்று மற்றொன்றின் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது. நாட்டின் முக்கிய அங்கங்களாகத் திகழும் இந்த 3 துறைகளைச் சேர்ந்தவர்களும், பரஸ்பரம் பிற துறைகளின் நடவடிக்கைகளில் தலையிடாமலும், தங்களது அதிகார வரையறைக்குள் மட்டும் செயல்படும் வண்ணமும் நமது அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவது குறித்து குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. இதற்குக் காரணம், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் 1,000-க்கும் குறைவான நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே நீதித் துறைக்கு உள்ளது. அதாவது, தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்வுக் குழு முறையால், உயர் நீதிமன்றங்களில் 906 நீதிபதிகளையும், உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதிகளையும் மட்டுமே நியமிக்க முடியும். அதேசமயம், கீழ் நீதிமன்றங்களில் 19,000 நீதிபதிகளை மாநில அரசுகள் நியமிக்கின்றன.
குற்றப் பின்னணி கொண்ட நீதிபதிகளால் மனித உரிமைகள் பறிக்கப்படுவதையும், மனித சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவதையும் காணும்போது, நீதித் துறையின் தலைவர் என்ற முறையில் எனது இதயம் வலிக்கிறது. சிறையில் இருக்கும் கைதிகளில் பெரும்பாலானோர், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்பவர்களே.

மத்திய சிறைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவும், மாவட்ட சிறைகளில் 72 சதவீதத்துக்கும் அதிகமாகவும் விசாரணைக் கைதிகள் இருக்கின்றனர். குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாமல், வழக்கு விசாரணையின்போதே அதிக காலம் அவர்கள் சிறையில் இருப்பது முரண்பாடாக உள்ளது.
வழக்குகளின் எண்ணிக்கை அல்லது மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகம் ஆலோசனை நடத்த வேண்டும். இதேபோல, நீதித் துறை விரைவில் தீர்ப்பு வழங்குவதற்கு வசதியாக நீதித் துறை அதிகாரிகள், வழக்குரைஞர்கள், காவல் துறையினருக்கு நவீன சாதனங்கள் வழங்கப்பட வேண்டும் என்றார் ஆர்.எம்.லோதா.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s