அரசியல், இந்தியா

காப்பீடு மசோதா தேர்வுக் குழுவுக்கு சென்றது: அருண் ஜெட்லி தகவல்

Arun jatlyகாப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவிகிதமாக உயர்த்தும் மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அடுத்தக் கூட்டத் தொடரின் முதல் வாரத்தில் கடைசி நாளில் அறிக்கை அளிக்குமாறு தேர்வுக் குழுவை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை 26 சதவிகிதத்தில் இருந்து 49 சதவிகிதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்மீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அவற்றின் வற்புறுத்தலுக்கு பணிந்து மசோதாவை தேர்வுக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது. ஆனால் மாநிலங்களவையில் பாஜவுக்கு 46 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 60 உறுப்பினர்கள் உள்ளனர். 250 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்கள் அவையில் மசோதாவை நிறைவேற்ற குறைந்தது 126 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இந்த குழுவுக்கு காங்கிரசின் ஆனந்த சர்மாவை தலைவராக நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. ஆனால் மரபு படி ஆளும் கட்சியின் எம்பியே தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்பதால் காங்கிரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்தக்குழுவில் ஆனந்த சர்மா, முக்தா அப்பாஸ் நக்வி, ஜே.பி.நத்தா, பி.கே.ஹரிபிரசாத், பி.செல்வம், ராம்கோபால் யாதவ், டெரக்ஒபிரைன், சதீஷ் சந்திரா மிஸ்ரா, பி.ராஜீவ், டி.ராஜா, நரேஷ் குஜ்ரால், ராஜிவ் சந்திரசேகர் என அனைத்து கட்சி உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s