மைக்ரோசாஃப்டில் பணியாற்றும் 18,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் ஐ.டி. துறை ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நெட்வொர்க் சாதனங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமான சிஸ்கோ, தற்போது தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ரவுட்டர்கள், அதி நவீன ஸ்விட்சுகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள சிஸ்கோவின் வருமானம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சிஸ்கோ 2011 முதல் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.