தேவையானவை:
ஆய்ந்த வாழைப்பூ, கடலைப்பருப்பு – தலா 2 கப்
துருவிய பனீர் – கால் கப்
காய்ந்த மிளகாய் – 4
ஓமம் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படி செய்வது?
வாழைப்பூவை ஆய்ந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆய்ந்த வாழைப்பூவில் மஞ்சள்தூள் சேர்த்து, 20 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். கடலைப் பருப்பை ஊறவைத்து அதில் ஓமம்,காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். வேகவைத்த வாழைப்பூ, துருவிய பனீர், அரைத்த கடலைப்பருப்பு கலவை எல்லாவற்றையும் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். தோசைக்கல் காய்ந்ததும் சிறிது எண்ணெய் விட்டு, உருண்டைகளை தட்டிப் போட்டு மிதமான தீயில் இருபக்கமும் வேக விட்டு எடுக்கவும்.