சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால் ஆகஸ்ட் 1ம் தேதி பெட்ரோல் விலை ஒரு ரூபாய் 9 காசு குறைக்கப்பட்டதாக இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் அசோக் கூறினார். கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைந்து கொண்டே வருவதால் பெட்ரோல் விலையும் குறைய வாய்ப்பிருக்கிறது. பெட்ரோல் விலையை மாதந்தோறும் 1 மற்றும் 16ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் மறுஆய்வு செய்வது வழக்கம். இந்த முறை சுதந்திர தினத்தன்று விலைக் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த முறை குறைக்கப்பட்ட அளவே இப்போதும் குறைய வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.