கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், விடியோ பதிவுகள்

நீங்களே செய்யுங்கள் : சணல் மணி தோரணம் விடியோ செய்முறையுடன்

jayashree
ஜெயஸ்ரீ நாராயணன்

சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – 3

அலங்கார சணல் மணி தோரணம்

 

விழா காலங்களில், திருமணங்கள், பிறந்த நாள் போன்ற வீட்டு நிகழ்ச்சிகளில் வழக்கமான பேப்பர் டிசைன்களை ஒட்டி அலங்கரிப்பதைக் காட்டிலும் நாமே செய்த கைவினைப் பொருட்கள் கொண்டு அலங்கரிப்பது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரக்கூடும். இதில் பணமும் குறைவாக செலவாகும் என்பது கூடுதல் சிறப்பு. நம் வீட்டை அலங்கரிப்பதன் மூலம் நம் இந்தப் பொருட்களை செய்கிறோம் என்கிற விளம்பரம் கிடைப்பதோடு, அதன் மூலம் சுயதொழில் வாய்ப்பும் ஏற்படலாம். அந்த வகையில் சணல் தோரணம் உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவு செய்யும். எளிய செய்முறை, குறைந்த செலவில் இவற்றை செய்யலாம்.  செய்யக் கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். செய்முறை விளக்கத்துக்கு விடியோவைப் பாருங்கள்.

 

jute garland (6)
சாயமிடப்பட்ட சணல் துணி (இரண்டு நிறங்களில்), சம்க்கி, கஜ்ஜோரி லேஸ், கோல்டன் லேஸ், வுட் க்ளு, ஃபேப்ரிக் க்ளு, கத்தரிக்கோல், ஸ்டேப்ளர். சணல் துணிகளில் வட்டவடிவத்தில் எத்தனை துண்டுகள்(தோரணத்தில் நீளத்துக்கு ஏற்ப) தேவையோ அவற்றை வெட்டி வைக்கவும்.
jute garland (8)
வெட்டிய வட்ட வடிவ துண்டை, இப்படி இரண்டாக வெட்டுங்கள். அனைத்தையும் இப்படி வெட்டி வைக்கவும்.
jute garland (11)
வெட்டிய துண்டின் வளைவான பக்கத்தில் கஜ்ஜோரி லேஸால் வுட் க்ளூ கொண்டு ஒட்டுங்கள்.
jute garland (17)
ஒட்டியது உலர்ந்ததும் இப்படி முக்கோண வடிவத்தில் வளைத்து உள்புறமாக வைத்து ஒட்டுங்கள். இப்போது இது மணி போல வந்துவிடும்.
jute garland (19)
இரண்டு மணி நேரம் கழித்து லேஸால் அலங்கரித்து ஒட்டி வைத்திருக்கும் சணல் மணிகள் மீது ஃபேப்ரிக் க்ளுவால்…
jute garland (22)
இப்படி சம்க்கிகளை ஒட்டுங்கள்.
jute garland (4)
அனைத்திலும் இப்படி சம்க்கி ஒட்டி தயாராக வைக்கவும். இவை உலர சற்று இடைவெளி தரவும்.
jute garland (25)
பிறகு, கோல்டன் லேஸால் சரியான இடைவெளியில் தயாரித்து வைத்திருக்கும் அலங்கார சணல் மணிகளை…
jute garland (28)
இப்படி ஸ்டேப்ளர் செய்யுங்கள்.
jute garland (30)
இதோ அலங்கார சணல் மணி தோரணம் தயார்.

சந்தேகங்கள், கைவினைப் பொருட்கள் செய்யத் தேவையான பொருட்கள் பற்றிய விவரங்கள் அறிய கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணனை தொடர்பு கொள்ளலாம்.

முகவரி

எண்: 13/7, ஷ்யாம்ஸ் துவாரகா

ஃபஸ்ட் மெயின் ரோடு,

ஷெனாய் நகர் கிழக்கு,

திரு.வி.க. பள்ளி எதிரில்

சென்னை:30

தொலைபேசி எண்: 9884501959

“நீங்களே செய்யுங்கள் : சணல் மணி தோரணம் விடியோ செய்முறையுடன்” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.