ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் ராபின் வில்லியம்ஸ் கலிபோர்னியாவில் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவர் தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலைச் செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணதிற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள செய்தியில், நகைச்சுவை நடிகர்கள் சமூகத்தின் விமர்சகர்கள். அவர்கள் தங்களின் கோபத்தை நகைச்சுவையால் மறைக்கின்றனர். ஆண்கள் அழுவதற்கு மரியாதையைக் கொண்டுவந்தவர் ராபின் வில்லியம்ஸ். அவருடைய திறமையால் எனக்கு அவரைப் பிடிக்கும். அவர் தற்கொலை செய்து இறந்தாரென்பது உண்மையென்றால், அவர் அவரது வாழ்க்கையை முடிவடையும் தேதிக்கு முன்பே முடித்துகொண்டதால் எனக்கு அவரைப் பிடிக்கவில்லை. இத்தகைய தகுதி, திறமை வாய்ந்த ஒரு கலைஞரிடமிருந்து, பொறுப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலையை நான் எதிர்ப்பார்க்கவில்லை. இது எனது இந்திய ஐடலான குரு தத்திற்கும் பொருந்தும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராபின் வில்லயமஸ் குட்மார்னிங் வியட்நாம், குட் வில் ஹண்டிங் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். குட் வில் ஹண்டிங் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.