ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசு பணத்தை வழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதோடு, புதிய சாதனையும் புரிந்த சதீஷ்குமார் சிவலிங்கம், ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான ஊக்கத் தொகையையும் மேசைப்பந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அச்சயதா ஷரத் கமல், அந்தோணி அமல்ராஜ், ஆடவர் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரூபிந்தர் பால் சிங், ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகியோருக்கு தலா 30 லட்சம் ரூபாய்க்கான ஊக்கத்தொகை வழங்கினார் ஜெயலலிதா.