செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

நீங்களே செய்யுங்கள்: செடிகள் வளர்க்க சிமெண்ட் தொட்டி!

வீட்டுத்தோட்டம் அமைப்பதுகூட செலவு பிடிக்கும் விஷயம்தான். இதில் அதிகப்படியான செலவு தொட்டிகள் வாங்குவதற்கு செய்ய வேண்டியிருக்கும். சிறிய அளவிலான தொட்டியே ரூ. 60 ஆக விற்கப்படுகிறது. மண் தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள் இடையே விலை வித்யாசம் எதுவும் இல்லை. இதற்கு ஒரு எளிய தீர்வு நாமே நமக்குத் தேவையான தொட்டிகளை தயாரித்துக் கொள்வதுதான். என்ன விளையாடுகிறீர்களா? தொட்டிகளை எப்படி நாமே தயாரிப்பது? அதற்கு நிறைய செலவாகுமே என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். எல்லோராலும் தொட்டிகளை உருவாக்க முடியும். அதற்குத் தேவையானவை, சில அட்டைப் பெட்டிகளும் குறைந்த அளவு சிமெண்ட் – மணல் மற்றும் உங்களுடைய ஆர்வம் இருந்தால் போதும். அழகான உருவங்களில், விதவிதமான அளாவுகளில் சிமெண்ட் தொட்டிகளை உருவாக்கிவிட முடியும்.

இதோ இந்த செய்முறை குறிப்புகளை கவனியுங்கள்.

DSCN0389
ஒரு பெரிய அட்டை பெட்டியும் அதற்குள் வைக்கத் தகுந்த சிறிய அட்டைப் பெட்டியும் எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய அட்டைப் பெட்டியின் உள்பக்கம் இப்படி செலபோன் டேப்பால் நெருக்கமாக ஒட்டுங்கள். அதேபோல் சிறிய அட்டைப் பெட்டியின் பின்பக்கம் முழுக்க செலபோன் டேப் ஒட்டுங்கள்.
DSCN0391
டேப் சுற்றிய பெரிய பெட்டியினுள் சிறிய பெட்டியை இப்படி வையுங்கள். (நீங்கள் தேர்ந்தெடுத்த பெரிய, சிறிய பெட்டிகள் இப்படி இருக்க வேண்டும்.) நான்கு புறமும் சிமெண்ட் கலவை போடுவதற்கு ஏற்ற சரியான இடைவெளியை உருவாக்குங்கள்.
DSCN0376
சிமெண்ட்டையும் மணலையும் சரியான பதத்தில் கலந்து கொள்ளவும். மணல் அதிகமாக இருந்தால் அதில் செய்யும் தொட்டி உறுதியாக இருக்காது. சிமெண்ட்டுடன் மணலை நன்றாக கலந்து பிறகு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். வெறும் கைகளால் கலக்கக் கூடாது. க்ளவுஸ் அல்லது கொளிறு கொண்டு கலக்கவும்.
DSCN0392
கலந்த கலவையை முதலில் பெரிய தொட்டியில் போட்டு சரி சமமாக பரப்பவும். அதன் மேல் சிறிய தொட்டியை சரியான இடைவெளி விட்டு வைக்கவும். இப்போது இரண்டு பெட்டிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை சிமெண்டால் நிரப்பவும். முழுவதும் நிரப்பி விட்டு, சிறிய தொட்டி மேலே எழும்பி வராதபடிக்கு அதன்மேல் ஒரு கனமான பொருளை வைக்கவும். ஒரு நாள் கழித்து இந்த கலவை மேல் இரண்டு வேளை தண்ணீர் தெளிக்கவும். அதற்கு அடுத்த நாள் வரை இதை நன்றாக உலர விடவும். 2 அல்லது 3 நாட்களுக்குப் பிறகு கலவை உலர்ந்து கெட்டி பட்டிருக்கும். இப்போது அட்டைப் பேட்டிகளை மெதுவாக பிரித்தெடுக்கவும்.
DSCN0414
அட்டைகளை பிரித்தெடுத்தால் நீங்களே செய்த சிமெண்ட் தொட்டி செடிகள் நட தயார்!

 

“நீங்களே செய்யுங்கள்: செடிகள் வளர்க்க சிமெண்ட் தொட்டி!” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.