காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 8 கண் மதகு திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டபோது, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். முதல்கட்டமாக வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் என்றும், பாசனத்திற்காக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதன் மூலம், காவிரி டெல்டா பகுதியில் உள்ள 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 108 புள்ளி 7 அடியாக இருந்தது. கர்நாடகாவிலிருந்து அணைக்கு வரும் நீரின் அளவு 89 ஆயிரத்து723 கனஅடியாக உள்ளது. இதே அளவுக்கு அணைக்கு வரும் நீரின் அளவு இருக்கும் பட்சத்தில், அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியை ஒரு சில தினங்களில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு
Advertisements