விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமரன் பத்மநாபன், கடந்த 2009ஆம் ஆண்டு மலேசியாவில் இலங்கை ராணுவத்தினால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு இலங்கை அரசு பொதுமன்னிப்பு வழங்கியது. இந்த நிலையில், குமரன் பத்மநாபனை இந்தியா அழைத்து வந்து, ராஜிவ் கொலை குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான மோகன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்யநாராயணா ஆகியோர் தலைமையிலான அமர்வு, இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.