
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா காங்கிரஸ் சார்பாக மாநிலங்களவை எம்.பி.க்களாக கடந்த 2012 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வது அரிதாக உள்ளதாக சக எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சிபிஐ எம்பி ராஜீவ் மாநிலங்களைவில் கூறுகையில், ஒரு எம்பி 60 நாட்கள் அவைக்கு வராமல் ஆப்சென்ட் ஆனால் அந்த எம்பிக்கான இடம் மாநிலங்களவையில் காலியாகவுள்ளதாக அறிவிக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான ராஜீவ் சுக்லா கூறுகையில் நடிகை ரேகாவும், சச்சினும் அடிக்கடி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டும் ஆனால் ஒரு எம்பிக்கானே உரிமைகள் பற்றி இருவரும் அறியவில்லை என்றார். மாநிலங்களவை எம்பி, கவிஞர் ஜாவித் அக்தர் கூறுகையில், எம்பி பதவி என்பது டிராபி கிடையாது அவர்களுக்கு என்று பொறுப்பு உள்ளது எனவே அவர்கள் அவைக்கு வரவேண்டும் என்றார்.