பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ஜான் ஆபிரஹாம், ஷாகித் கபூர் போன்ற பிரபல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் நர்கீஸ் ஃபக்ரி. தற்போது இவர் முதன் முறையாக கோலிவுட்டில் நடிக்க இருக்கிறார். கதாநாயகியாக அல்ல, ஒரு பாடலில் மட்டுமே நடிக்கிறார். நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் சாகசம் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி பிரசாந்துடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கும் இந்தப் படத்தில் தமன் இசையில் இந்தப் பாடலை ஸ்ருதி ஹாசன் பாடியிருக்கிறார்.