மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் மாதாந்திர கடன் வெளியீட்டு கொள்கை தொடர்பான கூட்டம் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன், வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று அறிவித்துள்ளார்.
நடப்பாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.5% அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2015 ஜனவரி வரை பணவீக்கம் 8% அளவில் இருக்கும் என்றும், அதன் பிறகு இது 6% ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், நடப்பாண்டிலும் பருவமழை குறைந்திருப்பதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பாண்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று ரகுராம் ராஜன் குறிப்பிட்டார்.