பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவதை இழிவாக சித்தரித்து இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் கட்டுரை வெளியானது. இதற்கு தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தொடர்போராட்டங்கள் நடைபெற்றது. அதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள், இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின. இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தநிலையில் இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. சர்சைக் கட்டுரை குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அரசு இணையதளத்தில் இந்த சர்ச்சை கட்டுரை வெளியானது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.