இன்று மாநிலங்களவையில் பேசிய கனிமொழி, தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டு 2 மாதங்கள் ஆன நிலையில், அவரை மீட்க அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து கேட்டார். ஈராக்கில் துப்பாக்கி ஏந்திய நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட 41 இந்தியர்களின் நிலை குறித்தும் அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க அனைத்துவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.