பட்ஜெட் சமையல் வரிசையில் கறிவேப்பிலைப் பொடி எப்படி செய்வது என்பதைப் பார்க்க இருக்கிறோம். விலை குறைவான காலகட்டத்தில் காய்கறிகள் வாங்கும்போது இலவசமாகவே கறிவேப்பிலை கிடைக்கும். விலை அதிகமான இந்தக் காலகட்டத்தில் குறைந்தது 5 ரூபாய் கொடுத்தால்தால்தான் கொடுப்பார்கள். கீரைகள் கட்டு ரூ. 10க்கு விற்கப்படும்போது கருவேப்பிலைக்கு ரூ. 5 கொடுத்து வாங்கலாம். கீரைகள் உள்ள அதே சத்து இதிலும் கிடைக்கும். குழம்புகளில் போட்டு தூக்கி எறிவதற்கு பதிலாக இதை உண்பதற்கு முறைகளில் சமைத்து உண்ணலாம். சட்னியாக அரைத்தோ துவையலாகவோ நிறைய கிடைக்கும் காலங்களில் பொடியாக அரைத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேவையானவை:
கறிவேப்பிலை – 5 கைப்பிடியளவு
உளுத்தம்பருப்பு – அரை கப்
காய்ந்த மிளகாய் – 10
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – வறுக்க
செய்வது எப்படி?
கறிவேப்பிலையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி நன்றாகக் காயவைக்கவும். காய்ந்த பிறகு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை வறுக்கவும். முதலில் கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு வறுத்த பொருட்களை உப்பு சேர்த்து சிறிது நறநறப்பாக அரைத்து, கறிவேப்பிலை பொடியுடன் கலந்து எடுத்து வைக்கவும். இதை ஒரு வாரம் வரைக்கும் வைத்து உண்ணலாம். ஈரம் படாதவகையில் பராமரிக்கவும். சாதத்துடன் இட்லி, தோசையுடன் இதை சேர்த்து உண்ணலாம்.
“பட்ஜெட் சமையல்: கறிவேப்பிலைப் பொடி” இல் ஒரு கருத்து உள்ளது