பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட குழுக்களுடன் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்றார். 17 ஆண்டுகளுக்கு பிறகு நேபாளத்திற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தில் நேபாள நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றிய மோடி, இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையே எரிபொருள் கொண்டு செல்வதற்கான குழாய்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தியாவில் படிக்கும், நேபாள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று பேசிய மோடி, நேபாளத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். நேபாளத்தின் இறையாண்மையில், இந்தியா ஒருபோதும் தலையிடாது என்று தெரிவித்த மோடி, நெடுஞ்சாலை, தொலைதொடர்பு, போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளில், அந்நாட்டுடன் இணைத்து செயல்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார். சார்க் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க மீண்டும் நேபாளத்திற்கு வர உள்ளதாகவும் நரேந்திர மோடி தெரிவித்தார்.