மதுரையில் கால்நடை,கோழிவளர்ப்பு தொடர்பான பணியரங்கு மற்றும் கண்காட்சி 2 நாள்கள் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டு மற்றும் சர்வதேச பண்ணைய ஆண்டு ஆகியவற்றை முன்னிட்டு இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. மடீட்சியாக அரங்கில் இன்று (ஆக.1) மற்றும் நாளை (ஆக.2) இந்நிகழ்வு நடைபெறும். பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்கம் இதற்கான ஏற்பாடு செய்துள்ளது.
குடும்ப பண்ணையம் மூலம் லாபகரமான கால்நடை மற்றும் கோழிவளர்ப்பு என்ற தலைப்பில் நடைபறும் இந்நிகழ்வில், கண்காட்சி, தொழில்நுட்ப விரிவுரைகள், தொழில்நுட்ப செயல் விளக்கங்கள், உழவர் விவாதமேடை ஆகியவை நடத்தப்படும்.
கண்காட்சியில் கலந்து கொள்ளும் பண்ணையாளர்களுக்கு உகந்த தொழில்நுட்பங்கள், பண்ணை இயந்திரங்கள், கருவிகள், கால்நடை உற்பத்தி பொருள்கள்,மதிப்பூட்டுதல் குறித்த செயல்விளக்கங்கள், விற்பனை வாய்ப்புகள் அளித்தல், பண்ணையாளர்களின் கண்டுபிடிப்புகள், வெற்றிக்கதைகள், கறவை மாடு மற்றும் ஆடுவளர்ப்பு தொழில்நுட்பங்கள், இறைச்சிக்கோழி, முட்டைக்கோழி, நாட்டுக்கோழி, ஜப்பானியக்காடை, வான்கோழி போன்ற கோழியினங்கள் வளர்ப்பு தொழில்நுட்பங்கள், வெண்பன்றி மற்றும் முயல் வளர்ப்பு தொழில்நுட்பங்கள், பசுந்தீவன உற்பத்தி வழிமுறைகள்,மதிப்பூட்டிய பால் மற்றும் இறைச்சி பொருள்கள் தயாரிப்பு போன்ற விவரங்கள் இடம்பெற உள்ளன.
நிகழ்ச்சியில் பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறை நிபுணர்கள், வங்கிகளின் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர். கால்நடை பண்ணையாளர்கள், விவசாயிகள், சுய உதவிக்குழுவினர், தொழில்முனைவோர், பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். அனுமதி இலவசம். பல்கலைக்கழக உழவர் பயிற்சி மையத்தலைவர் மற்றும் பேராசிரியர் மா.கதிர்ச் செல்வன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
என்னிடம் தாய் முயலுக்கான கூண்டுகள் விற்பனைக்கு உள்ளது தேவை உள்ளவர்கள் அனுகவும் . 9659331953,7373485450,