இன்றைய முதன்மை செய்திகள், இலங்கை

மீனவர் பிரச்னை தொடர்பாக ஜெயலலிதா, மோடிக்கு எழுதும் கடிதங்கள் பற்றி சர்ச்சைக்குரிய தலைப்பில் கட்டுரை!

jaya's love letters to modi

இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சக இணையதளத்தில் ஷெனாலி வடுகே என்ற பத்திரிகையாளர் சர்ச்சைக்குரிய தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மீனவர் பிரச்னை தொடர்பாக மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் அர்த்தம் பொதிந்தவையா? என்பதே அந்தத் தலைப்பு. மீனவர்கள் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காணும் வழியைத் தேடாமல் மோடி தலைமையிலான அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காகவும் இலங்கை இந்தியாவுடனான நல்லுறவை கெடுப்பதற்காகவும் தொடர்ந்து கடிதம் எழுதிவருவதாக அந்தக் கட்டுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Waduge-Shenali_Photo
கட்டுரையாளர் ஷெனாலி

இந்திய பகுதிகளில் மீன்வளம் குறைந்துவிட்டது என்பதற்காக இன்னொரு நாட்டின் மீன்வளத்தை திருடும் செயலை எப்படி நியாயப்படுத்த முடியும் என்றும் இலங்கை கடற்பரப்பில் உள்ள மீன்வளத்தை தமிழக மீனவர்கள் அபகரிப்பதால் இலங்கைக்கு பல கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கட்டுரையில் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆழ்கடல் மீன்பிடிக்கும் உத்தியால்தான் இந்திய கடல் பகுதிகளில் மீன்வளம் குறைந்தது. அதையேதான் எல்லை தாண்டி இலங்கை கடற் பகுதிகளிலும் தமிழக மீனவர்கள் செய்கிறார்கள். இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான மீன்வளத்தை இப்படி அடியோடு சுரண்டுவதற்கான அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? இதுதான் நியாயமா?

ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்ளும் தமிழக அரசுகளின் இந்தப் போக்குக்கு மத்தியில் ஆட்சிக்கும் வரும் அரசுகள் செவிசாய்ப்பதில்லை. முந்தைய காங்கிரஸ் அரசும் இந்த நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான மோடி அரசும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. இந்தியாவுடனான நல்லுறவை பேணும் வகையிலே எல்லைதாண்டும் மீனவர்கள் உடனுக்குடன் இலங்கை விடுவிக்கிறது. ஆனால் இதை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு ஜெயலலிதா மீண்டும் மீண்டும் கடிதம் எழுதி இலங்கை இந்திய நல்லுறவை கெடுக்க நினைக்கிறார். மத்திய அரசை நிர்பந்தப்படுத்துகிறார். என்று எழுதப்பட்டுள்ளது.

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s