குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பட்ஜெட் சமையல் – ஸ்டஃப்டு கத்தரிக்காய் வதக்கல்

DSCN0455

தக்காளி, வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் எல்லோராலும் வாங்க முடிகிற, அதே சமயம் சத்தான காய்கறிகளிலிருந்து செய்யும் சமையல் குறிப்பு(புடலை பால் குழம்பு, பாசிபருப்பு சொதி)களை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ஸ்டஃப்டு கத்தரிக்காய் வதக்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை:
கத்தரிக்காய் – கால் கிலோ,
இஞ்சி – பெரிய துண்டு
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கடுகு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – 4 அல்லது 5 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது?
கத்தரிக்காயில் மசாலா அடைப்பதற்கு ஏற்ற வகையில் கத்தரிக்காயின் முகப்பு பகுதியை நான்காகக் கீறிக் கொள்ளவும்.

இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை தண்ணீர் விடாமல் அரைத்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். இந்தக் கலவையை கத்தரிக்காயின் உள்ளே அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு தாளித்து அதில் மசாலா அடைத்து வைத்துள்ள கத்தரிக்காய்களை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து சுருள வதக்கவும்.

இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். மிகுந்த சுவையாக இருக்கும். மல்லித் தழை இல்லையென்றால் மல்லி விதைகள் சேர்த்து அரைத்தும் ஸ்டஃப் கலவை தயாரிக்கலாம்.

“பட்ஜெட் சமையல் – ஸ்டஃப்டு கத்தரிக்காய் வதக்கல்” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.