கல்வி - வேலைவாய்ப்பு, தமிழ்நாடு

25 சதவீத இடஒதுக்கீட்டை மறுத்த தனியார் பள்ளிகள்: பட்டியலை தயாரிக்கிறது மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்

school studentsஇலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, நுழைவு வகுப்புகளில் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்த பள்ளிகளின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்களைப் பெற கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு சுற்றறிக்கைகளும் அனுப்பப்பட்டன. கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை இந்த ஒதுக்கீட்டின் கீழ் 75 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க மறுத்ததாக சில பள்ளிகள் மீது புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்க்க மறுப்பது சட்டத்தை மீறிய செயலாகும்.

அவ்வாறு 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை செய்யாத தனியார் பள்ளிகளின் பட்டியலையும், அதற்கான காரணங்களையும் குறிப்பிட்ட பள்ளியிலிருந்து பெற்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.  அதேபோல், கல்வியாண்டு தொடங்கிய தினத்திலிருந்து 6 மாதங்கள் வரை இந்தப் பிரிவின் கீழ் மாணவர் சேர்க்கை நடத்தலாம். அதாவது நவம்பர் 30-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்ற விவரத்தை தனியார் பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை, 25 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்திய பள்ளிகளின் எண்ணிக்கை, பகுதியளவு மட்டும் இந்த ஒதுக்கீட்டை செயல்படுத்திய பள்ளிகளின் எண்ணிக்கை, இந்த ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை மறுத்த பள்ளிகளின் எண்ணிக்கை, சேர்க்கை மறுக்கப்பட்டதற்கான காரணம் உள்ளிட்ட விவரங்களை மெட்ரிகள் பள்ளிகள் இயக்குநரகம் கோரியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s