அரசியல், இந்தியா

ரயில்வேயில் நவீனமயமாக்கம் என்ற பெயரில் மக்கள் மீது கட்டண சுமை!

railwayஎக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களில் 2ம் வகுப்பு  பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து அதற்கு பதிலாக 3 அடுக்கு  ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது ரயில்வே. இதனால் நடுத்தர மக்கள் பயணம் செய்யும்  இருக்கைகள் குறைவதுடன், மூன்று மடங்குக்கும் அதிகமான  கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல்  கட்டமாக தெற்கு ரயில்வேயில் இந்த மாற்றத்தை ரயில்வே  அமல்படுத்தி உள்ளது. கூடுதல் கட்டண சுமை, பயணிகள் இடையே  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளம் – நிஜாமுதீன் மங்களா  எக்ஸ்பிரஸ் (எண் 12617) ரயிலில் நேற்று முன்தினம் எஸ்-2 என்ற  இரண்டாம் வகுப்பு பெட்டி அகற்றப்பட்டது. அதற்குப் பதிலாக பி-4 என்ற  மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி இணைக்கப்பட்டது. எஸ்-2 பெட் டிக்கு  முன்பதிவு செய்தவர்களுக்கு, தட்கல் டிக்கெட்டுகள் அளிக்கப்பட்டன. அத  னால் குடும்பமாக வந்தவர்கள் தனித்தனி பெட்டிகளில் அமர வேண்டிய  நிலை ஏற்பட்டது. இந்த ரயிலில் இதுவரை 11 இரண்டாம் வகுப்பு  பெட்டிகள், 3 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 2 இரண்டு அடுக்கு ஏ.சி.  பெட்டிகள் இருந்தன. தற்போது இது முறையே 10, 4, 2 என்று  மாற்றப்பட்டுள்ளது. எர்ணாகுளம் – நிஜாமுதீன் இடையே இயக்கப்படும்  ரயிலில் இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.925. அதே நேரத்தில்  மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிக்கான கட்டணம் ரூ.2,370. இந்த கூடுதல்  கட்டண சுமை, பயணிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி  உள்ளது.

சென்னை சென்ட்ரல் – கோவை சேரன் எக்ஸ்பிரஸ்  ரயிலில் எஸ்-2 இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு பதிலாக மூன்று அடுக்கு  ஏசி பெட்டி சேர்க்கப்படுகிறது. இதேபோல், மறுமார்க்கத்தில் இயக்கப்படும்  சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இதே மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை  – திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் – அகமதாபாத்  நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இதே போன்று மாற்றங்கள்  செய்யப்படுகின்றன. இதேபோல் நேற்று முன்தினம் இயக்கப்பட்ட சென்னை  எழும்பூர் – மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (எண் 16859) ரயிலில் எஸ்-7  இரண்டாம் வகுப்பு பெட்டி நீக்கப்பட்டு 2ம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டி சேர்க்கப்பட்டது. இன்று முதல் மங்களூர் சென்ட்ரல் –  சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண் 16860) ரயிலில் எஸ்-9 இரண்டாம்  வகுப்பு பெட்டி நீக்கப்பட்டு 2ம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டி  சேர்க்கப்படுகிறது.

இரண்டாம் வகுப்பு பெட்டிகளை  தயாரிப்பதை ரயில்வே வாரியம் வெகுவாக குறைத்துள்ளது. அதே  நேரத்தில் ஏ.சி. பெட்டிகள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. இரண்டாம்  வகுப்பு பெட்டிகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக மூன்றடுக்கு ஏ.சி.  பெட்டிகளை படிப்படியாக சேர்க்கும்படி உத்தரவு வந்துள்ளது என்றனர்.  ரயில்வே வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “நாடு முழுவதும்  எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகள்  படிப்படியாக நீக்கப்பட்டு, ஏ.சி. பெட்டிகள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதன் மூலம் அடுத்த 5-6 ஆண்டுகளில் இந்த ரயில்களில் 2ம் வகுப்பு  பெட்டி இருக்காது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.  பயணிகளுக்கு சுகமான பயணம், மிகச் சிறந்த வசதிகள் கிடைக்கும்.  நீக்கப்படும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள், நடுவில் உள்ள பெர்த்தை  நீக்கிவிட்டு பாசஞ்சர் ரயில்களில் பயன்படுத்தப்படும் என்றும் ரயில்வே  வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 2ம் வகுப்பு பெட்டிகளை நீக்குவதால்  நடுத்தர மக்களுக்கான இருக்கைகள் குறைகிறது. ஒரு இரண்டாம் வகுப்பு  பெட்டியில் 72 இருக்கைகள் உள்ளன. இந்த வசதி கிடைக்காத  நிலையில் அவசரமாக செல்ல வேண்டுமானால், வேறு வழியில்லாமல்  ஏ.சி. பெட்டியில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதற்கு மூன்று  மடங்குக்கும் அதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளது என்று பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s