
நடுத்தர வர்க்கத்தை பாதிக்கும் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கித் தலைவர்கள், நிர்வாக இயக்குனர்களுடன் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 31ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பொதுத்துறை வங்கி உயரதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசுவது இதுதான் முதல்முறை. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கடன் வட்டியை குறைக்குமாறு இந்தக் கூட்டத்தில் வங்கித் தலைவர்களிடம் அருண் ஜெட்லி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
அதிகரித்து வரும் வாராக்கடனை வசூலிப்பது, அதிக கடன் பெற்று செலுத்தத் தவறிய பெரிய நிறுவனங்களின் பெயர்களை அண்மைக்காலமாக வங்கி ஊழியர் சங்கங்கள் வெளியிட்டு வருவது ஆகியவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.