தக்காளி விலை ரூ. 100ஐ எட்டிக்கொண்டிருக்கிறது. தக்காளி இல்லாமல் சமைக்க முடியாது என்கிற நிலைக்கு நம்முடைய சமையல் முறை சென்றுவிட்டது. உண்மையில் தக்காளி சில பத்தாண்டுகளில்தான் இந்திய சமையலில் முக்கியத்துவம் பெற்றது. தக்காளி எப்போது நம் சமையலில் இடம் பெற ஆரம்பித்தது என்கிற ஆய்வை விரைவில் எழுதுகிறோம். அதற்கு முன் அதிகம் தக்காளி பயன்படுத்தாமல் செய்யும் சில சமையல் குறிப்புகளைத் தருகிறோம். அதில் முதலாவதாக புடலை பால் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை:
புடலங்காய் – கால் கிலோ
பாசிப்பருப்பு – அரை கப்
பால் – ஒரு கப்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
அரைக்க:
உளுத்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
தேங்காய்துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
எப்படி செய்வது?
பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின் இதை குழம்பு பாத்திரத்திரத்தில் போட்டு நன்றாக வேகவையுங்கள். புடலங்காயை கழுவி இரண்டாக வெட்டி விதை நீக்கி மெல்லிய அரை வட்டத் துண்டுகளாக நறுக்குங்கள். குக்கரில் புடலங்காயை போட்டு அரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து, ஒரு விசில் வைத்து இறக்குங்கள். இதை பருப்பு வெந்தவுடன் சேருங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் உளுத்தம்பருப்பு, சீரகத்தை மட்டும் பொன்னிறமாக வறுத்து, மற்ற பொருட்களை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்குங்கள். அதை ஆறவைத்து அரைத்து அடுப்பில் இருக்கும் புடலங்காய் பருப்பு கலவையுடன் சேருங்கள். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கி பால் சேருங்கள்.
சாதம், சிற்றுண்டி என அனைத்து உணவுடனும் உண்ண ஏற்ற குழம்பு.
“கடந்த பதினைந்து நாட்களாக தக்காளியின் விலை ஏறுமுகமாக இருப்பதாலும், தற்போது கிலோ 80 ரூபாய் வரை விற்பதாலும் ‘தக்காளி வாங்கலாமா? வேண்டாமா?’ என்கிற கேள்வி வேறு என்னுள் எழுந்தவாறே இருந்தது. சந்தையில் முதல் தர தக்காளியைக் காணமுடியவில்லை. நான் வழக்கமாக வாங்கும் கடைக்காரரிடமும் இரண்டாம் தர தக்காளிதான் இருந்தது.
”
நாங்கல்லாம் கீரைக்கு மாறி ரொம்ப நாளாச்சு!
http://hooraan.blogspot.in/2014/07/blog-post_20.html
அருமையான குறறிப்புகள்