சினிமா

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே: முதல் பார்வை

முதல் திரைப்படமான ஆரோகணம் மூலம் கவனத்தை ஈர்த்த, நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் இயக்கும் இரண்டாவது திரைப்படம் நெருங்கி வா முத்தமிடாதே. ஏ.வீ.ஏ நிறுவனம் சார்பில் இந்த திரைப்படத்தை ஏ.வீ அனூப் தயாரிக்கிறார். ஷபீர் கலரக்கல் கதை நாயகனாகவும் பியா பாஜ்பாய் கதாநாயகியாகவும் நடிக்க லூசியா புகழ் சுருதி ஹரிஹரன், தம்பி ராமைய்யா, ஒய்.ஜி மகேந்திரன், அம்பிகா, ஏ.எல் அழகப்பன், தலைவாசல் விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

This slideshow requires JavaScript.

தேசிய பெட்ரோல் தட்டுப்பாடு என்பது மைய கருத்துக்காக கொண்டு நகரும் இந்த நெருங்கி வா முத்தமிடாதே திரைப்படத்தின் உள்ளே நான்கு வாழ்க்கை கதைகள் பின்னி பிணைந்து இருக்கின்றன. உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக திரைக்கதை அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் வினோத் பாரதி, படத்தொகுப்பு தேசிய விருது பெற்ற சாபு ஜோசப், இசை மேட்லி ப்ளூஸ், சண்டை பயிற்சி மிரட்டல் செல்வா, கலை இயக்கம் ராஜா மற்றும் குமார்.பாடல்களை தேசிய விருது பெற்ற நா.முத்துகுமார் எழுத ஷங்கர் மாகாதேவன் ,சின்மயி நந்தினி ஸ்ரீகர் ,மில்லி நாயர் ஆகியோர் பாடியுள்ளனர். தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால், கும்பகோணம், நெய்வேலி, மலேசியா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்கப் பட வேண்டியுள்ளதாக செய்தித் தொடர்பாளர் நிகில் கூறுகிறார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s