சுற்றுச்சூழல், பறவைகள்

அழியும் பறவையினங்கள்!

Eagle courting
படம் : டாக்டர் மயில்வாகனன்

இந்தியாவில் 173 பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (ஐ.யூ.சி.என்) தெரிவித்துள்ளது.

உயிரினங்களின் பாதுகாப்பு நிலை குறித்து ஆண்டுதோறும் அந்த அமைப்பு வெளியிடும் சிவப்புப் பட்டியலில், இந்த ஆண்டில் புதிதாக 8 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அந்தமான் வாத்து, அந்தமான் பச்சைப் புறா, சாம்பல் நிற தலையுள்ள பச்சைப் புறா, சிவப்புத் தலையுள்ள ஃபால்கன் கழுகு உள்ளிட்ட பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேபோன்று, உலக அளவில் 13 சதவீத பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி, உலக அளவில் இந்த ஆண்டில் சிவப்புப் பட்டியலில் 10,425 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 140 பறவையினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. 4 இனங்கள் பூர்விக இடத்தில் அழிந்துவிட்டன. 213 இனங்கள் மிக அரிதாகவும், 413 இனங்கள் அரிதாகவும் காணப்படுகின்றன. 741 இனங்கள் அழிய வாய்ப்புள்ளவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவைகளின் வாழிடங்களை அழித்ததே அவற்றின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s