விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை குழந்தைப் போராளியாகச் சித்திரித்து ‘புலிப்பார்வை’ என்றொரு திரைப்படத்தை பிரவீண் காந்தி இயக்கி வருகிறார். இந்தப் படம் பற்றி விமர்சனங்கள் வந்தபடி உள்ளன.
இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷோபா சக்தி, ‘இது கடுமையான கண்டனத்திற்குரியது என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. பாலச்சந்திரன் ஆயுதம் ஏந்திப் போராடியாதாகச் சான்றுகள் ஏதுமில்லை. சரணடைந்தபோதே பாலச்சந்திரன் இராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த இடத்தில் புலி விசுவாசிகள் தங்களது மனதைத் திறந்து இன்னொன்றையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். புலிகள் குழந்தைகளை இயக்கத்தில் சேர்த்ததில்லையா? இந்த நிழற்படத்திலிருக்கும் குழந்தைகளுக்கும் சற்றொப்ப பாலச்சந்திரனின் வயதுதானேயிருக்கும்? எத்தனையோ பாலச்சந்திரன்கள் புலிகளால் கைகளில் ஆயுதம் திணிக்கப்பட்டு யுத்த முன்னரங்கிற்கு அனுப்பப்பட்டு கொல்லக் கொடுக்கப்பட்ட போதெல்லாம் மயிர் கூச்செறிய ஆராதித்த நீங்கள் இன்றொரு செலுலாயிட் பாலச்சந்திரனுக்காகக் கொதிப்பது உங்களுக்கே வேடிக்கையாயில்லையா?’ என்று கேள்விக் கேட்டுள்ளதோடு
‘அடிப்படைக் குற்றம் பாலச்சந்திரனை குழந்தைப் போராளியாகச் சித்திரிக்கும் பட இயக்குனரிடமில்லை… அது ஆயிரக்கணக்கான குழந்தைப் போராளிகளை உருவாக்கிய பாலச்சந்திரனின் தந்தையாரிடமே இருக்கிறது’ என்று கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் வேந்தர் மூவிஸ் குறித்தும் இப்போது விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது
‘இந்தத் திரைப்படத்தை வேந்தர் மூவீஸ் வாங்கியுள்ளது. சத்தியமாக ஓடவே ஓடாது என்ற திரைப்படங்களை தேடிப் போய் வாங்குவதே வேந்தர் மூவீஸின் சிறப்பு. மற்றொரு கூடுதல் தகவல். வேந்தர் மூவீஸ் மதன்தான் இதில் வேலுப்பிள்ளை பிரபாகரனாக நடிக்கிறார்.தியேட்டரில் மொத்தமே 22 பேர் இருந்தாலும், தியேட்டர் அதிபர்களை வைத்து, 800 டிக்கெட்டுகள் விற்றது போல கணக்குக் காட்டி, பணத்தை செலுத்தச் சொல்லி, எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சம்பாதிக்கும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதே இதன் நோக்கம் மற்றும், புலிகளைப் பற்றி படம் எடுப்பதாகக் கூறிக் கொண்டு “வேர்ல்ட் பேமஸ்” ஆகுவதும் தான் என்று சவுக்கு சங்கர் தன் முகப்பு பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
தகவலுக்கு நன்றி.
//எத்தனையோ பாலச்சந்திரன்கள் புலிகளால் கைகளில் ஆயுதம் திணிக்கப்பட்டு யுத்த முன்னரங்கிற்கு அனுப்பப்பட்டு கொல்லக் கொடுக்கப்பட்ட போதெல்லாம் மயிர் கூச்செறிய ஆராதித்த நீங்கள் இன்றொரு செலுலாயிட் பாலச்சந்திரனுக்காகக் கொதிப்பது உங்களுக்கே வேடிக்கையாயில்லையா?’ //
மிக நியாயமன கேள்வி. இங்கேயிருந்து இலங்கை யுத்தத்தை ஆராதித்தவங்க செம்பு தூக்கியவங்க அத்தனை பேரும்,அரசியல் கட்சிகளும் போர் குற்றவாளிகளே.