தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்வதி. அதன் பிறகு மலையாள, கன்னட படங்களில் நடித்தார். மீண்டும் தமிழில் சென்னையில் ஒரு நாள், மரியான் படங்களில் நடித்தார். இவர் மோகன்லாலுடன் நடித்த பெங்களூரு டேஸ் வணிக ரீதியாகவும் கலைப்படைப்பாகவும் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் மலையாள இணைய இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சினிமா நடிக்க ஆரம்பித்த புதிதில் பார்வதி மேனன் என்று எதோ ஒரு பத்திரிகை எழுதப்போக அதுவே நிலைபெற்றுவிட்டாதாக தெரிவித்திருக்கிறார். ‘மேனன் என்கிற பெயர் சேர்க்கைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேனன் பெயரை சேர்க்காமல் எழுதினால் உண்மையில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி என்கிறார் பார்வதி.
சினிமா கலைஞர்கள் நல்ல நடிகர்களாக மட்டும் இல்லாமல் குறைந்த பட்ச அறத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுவரை பார்வதி 13 படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு தவிர, பார்வதிக்கு நடனத்திலும் எழுத்திலும் ஆர்வமாம்.