மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் நடிகர் அரவிந்த் ஸ்வாமி மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் இளையராஜாவின் 1001வது படம். இந்தப் படம் ஹர்ஷ் தவே தயாரிப்பில், வி.மணிகண்டன் ஒளிப்பதிவில் வித்யாசமான கதையமைப்பில் உருவாகிறது. ஒரே நேரத்தில் ஹிந்தி மற்றும் தமிழில் தயாராகும் இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.