இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

நெல் கொள்முதலுக்கு ஊக்கத் தொகை வழங்கினால் மானியம் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு

Rice paddyநெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் நீண்ட காலமாக வழங்கி வரும் ஊக்கத் தொகையை இனிமேல் வழங்கக் கூடாதென்றும், அப்படி ஊக்கத் தொகை வழங்கி கொள்முதல் செய்தால் மானியம் வழங்கப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்து வழங்கி வருகிறது. எனினும், தமிழகம் போன்ற சில மாநிலங்கள் மத்திய அரசு அறிவிக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை விவசாயிகளை நிறைவு செய்யாது என்பதால், குறைந்த பட்ச விலையோடு கூடுதல் விலையை ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயித்து ஊக்கத் தொகை அளித்து விவசாயிகளுக்கு உதவி வருகிறது.

இந்த நிலையில் அண்மையில் மத்திய உணவு அமைச்சகம் மாநில அரசுகளுக்கு இது தொடர்பான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதில், “இந்திய உணவுக் கழகம் மூலம் சில மாநிலங்களில் உணவு தானியம் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்தக் கொள்முதல் குறைந்த பட்ச ஆதரவு விலையை விட அதிகமாக இருக்கக் கூடாது. உபரியாக இப்படிக் கொள்முதல் செய்யப்படும் மற்றும் வினியோகிக்கப்படும் உணவு தானியங்களுக்கு மானியம் வழங்கப்படமாட்டாது. பரவலாக்கப்பட்ட கொள்முதல் அடிப்படையில் உணவு தானியங்களை வாங்கும் மாநிலங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலையை விட கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்யக் கூடாது. பொது விநியோகத் திட்டம் மற்றும் மக்கள் நலத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் கோதுமை, நெல்லுக்கு மட்டுமே மத்திய அரசு மானியம் வழங்கும். அதற்கு மேல் உபரியாகக் கொள்முதல் செய்யப்படும் தானியங்களுக்கு மானியம் வழங்காது. இந்த விதிமுறை 2014-2015ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் துவங்கும் அக்டோபர் மாதத்திலிருந்தும் 2015-2016ஆம் ஆண்டுக்கான கோதுமை கொள்முதல் துவங்கும் அடுத்த ஏப்ரல் மாதத்திலிருந்தும் அமலுக்கு வருகிறது. இந்திய உணவுக் கழகம் இல்லாத மாநிலங்களில் அரசின் கொள்முதலுக்கும் இந்த விதி பொருந்தும்” என்று கூறப்பட்டுள்ளது. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பல பயிர்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்கவும் இந்த முடிவு அறிவிக்கப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது.

தமிழகத்தில் தற்போது சன்ன ரக நெல்லுக்கு மத்திய அரசின் விலையாக 1,340 ரூபாயும், மாநில அரசின் ஊக்கத் தொகையாக 70 ரூபாயும் சேர்த்து குவிண்டாலுக்கு 1,410 ரூபாய் என்றும், பொது ரக நெல்லுக்கு மத்திய அரசின் விலையாக 1,310 ரூபாயும், மாநில அரசு 50 ரூபாயும் சேர்த்து குவிண்டாலுக்கு 1,360 ரூபாய் வழங்கப்படுகிறது.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s