‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாகக் கூறி முன்னாள் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, தொலை தொடர்பு துறை அதிகாரிகள், தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில், அவரின் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த வழக்கில், எனக்கு எதிராக டில்லி சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என, மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த மனு மீதான விசாரணையை விரைந்து மேற்கொண்டு தீர்ப்பு அளிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.