தெலுங்கானா மாநிலத்தின் முதல் தூதராக நேற்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நியமிக்கப்பட்டார். இது அரசியல் கட்சிகளிடையே பலத்த எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. தெலுங்கானா பாஜக எம் எல் ஏ லஷ்மண் , ‘பாகிஸ்தானின் மறுமகளான ஒருவருக்கு எப்படி தெலுங்கானா தூதர் பதவி தரலாம்’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுபற்றி தெலுங்கானா காங்கிரஸ் எம் பி அனுமந்தராவ் ‘சானியா எங்கு பிறந்தார், எங்கு வாழ்கிறார் என்பது முக்கியமில்லை. அவர் தெலுங்கானாவுக்காக என்ன செய்தார் என்பதே முக்கியம். அந்த வகையில் தெலுங்கானாவுக்காக எதுவும் செய்யாத சானியாவுக்கு தூதர் பதவி வழங்கப்பட்டது கண்டனத்துக்குரியது’ என்று தெரிவித்திருக்கிறார்.
சானியா மிர்சா கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார்.