மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ ஃபாஸோவின் தலைநகர் ஓகடாகோவில் இருந்து அல்ஜீரிய விமானம் ஏஎச்5017 அல்ஜீயர்ஸ் நோக்கிச் சென்றது. இந்த விமானத்தில் 110 பயணிகள் 6 பணியாளர்கள் இருந்தனர். அது பர்கினோ ஃபாசோவில் இருந்து கிளம்பிய 50 நிமிடங்களில் அது ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மறைந்து மாயமானது.

இந்நிலையில் விமானம் நைஜர் என்ற பகுதியில் விழுந்து விபத்துகுள்ளதாக சிசிடிவி செய்தி நிறுவனமும் அலிஜீரியா டிவியும் தெரிவித்துள்ளன. இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது. இந்த விமானத்தில் பயணித்தவர்களில் பலர் பிரஞ்சு பயணிகள் என செய்தி வெளியாகியுள்ளது. விமானப் பணியாளர்கள் ஸ்பெயின் நாட்டினர் என்றும் தெரிய வந்துள்ளது. விமான விபத்து எதன் காரணமாக நிகழ்ந்தது என இதுவரை தெரியவில்லை.