அறிவியல், அறிவியல் எழுத்து

டைனோசர் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய பறவையின் புதைபடிமம் கண்டுபிடிப்பு!

giant_bird

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனங்களிலேயே மிகப்பெரிய பறவையின் புதைபடிமத்தை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் தெற்கு கரோலினா கடற்பரப்பில் இந்த புதைபடிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமத்தை விரிவாக ஆராய்ந்ததில், மிகப்பெரிய பறவையின் பாதுகாக்கப்பட்ட எச்சங்களை அதில் இவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த பறவைகள் தனது இறக்கைகளை விரித்தால் அதன் அகலம் ஆறு மீட்டர் முதல் ஏழறை மீட்டர் வரை இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
தற்போது உயிர்வாழும் பறவைகளிலேயே அல்பட்ராஸ் என்னும் கடற்பறவைதான் மிகப்பெரிய பறவையாக அறியப்படுகிறது. இவற்றின் இறக்கைகளின் அகலம் அதிகபட்சம் மூன்று மீட்டர். அப்படி பார்க்கும்போது இந்த புதைபடிம பறவை அல்பட்ராஸைவிட இரண்டு மடங்கு பெரிய பறவையாக இருந்திருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள் .
இரண்டரை கோடி ஆண்டு(டைனோசர் காலம்)களுக்கு முன்னர் வாழ்ந்ததாக கணக்கிடப்படும் இந்த பறவையின் உருவத்தை விஞ்ஞானிகள் கணினி மூலம் மாதிரி வடிவை உருவாக்கிப் பார்த்தபோது அந்த பறவை வானில் பறந்தபோது கம்பீரமாக பறந்திருக்கக்கூடும் என்று கணித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த பறவையின் மிகப்பெரிய உருவமும் எடையும் அது நிலத்திலிருந்து வானத்துக்கு மேலெழும்பும் போதும் வானில் இருந்து நிலத்துக்கு கீழிறங்கும்போதும் அதற்கு கடும் சிரமத்தைக் கொடுத்திருக்கக்கூடும் என்கிறார்கள்.
பெலகோர்னிஸ் சந்தெர்ஸி (Pelagornis sandersi) என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இது கடல்நாரையின் முன்னோர்களில் ஒன்றாக இருந்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.