அரசியல், தமிழ்நாடு

கோபாலபுரம் வீடு மட்டும்தான் என் சொத்து: கருணாநிதி விளக்கம்

karunaசொத்துக் கணக்கை காட்டத் தயாரா? என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ எழுப்பிய கேள்விக்கு அளித்துள்ள பதிலில் திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் வீடு மட்டும்தான் என் சொத்து என தெரிவித்துள்ளார். தன்னுடைய சொத்துக் கணக்கு திறந்த புத்தகம் என்று குறிப்பிட்டுள்ள கருணாநிதி, சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு முறை போட்டியிட்ட போதும், அந்த கணக்கு தரப்பட்டு, நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது என கூறியுள்ளார். சொத்துக் கணக்கைக் காட்டத் தயாரா என கேள்வி கேட்கும் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, தன்னுடைய சொத்துக் கணக்கை வெளியிடுவாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு வழக்கில் ஜாமின் வழங்கினார் என்பதற்காக நீதிபதி ஒருவருக்கு பல்வேறு உதவிகளைத் தான் செய்ததாக நீதிபதி கட்ஜூ கூறியிருப்பதையும் கருணாநிதி மறுத்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு காவல்துறையினர் தன்னை கைது செய்து நீதிபதி அசோக் குமார் வீட்டிற்கு கொண்டு சென்ற போது, அவர் தன்னை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார் என்பதுதான் உண்மை என்று தெரிவித்துள்ள கருணாநிதி, தன்னைக் கைது செய்ததால் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பைக் கருத்தில் கொண்டு சில நாட்களில் அரசே தன்னை சிறையில் இருந்து விடுவித்தது என்றும் கூறியுள்ளார். இதனால், ஜாமின் கேட்க வேண்டிய அவசியமே தனக்கு எழவில்லை என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s