மேற்கு வங்கத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்ட 7 வயது சிறுமி உடல்
மேற்கு வங்காள மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி 7 வயது சிறுமியை கொலை செய்து மரத்தில் தொங்கவிடப்பட்டார். மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுமி நேற்று மாலை காணாமல் போயுள்ளார். இந்நிலையில், இன்று மரமொன்றில் பிணமாக தொங்கிய அச்சிறுமியின் உடலை ஊர்மக்கள் கண்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், சிறுமியைக் கடத்தி சீரழித்துக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட மூன்று பேரைப் பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மற்ற இருவரைக் கைது செய்துள்ளனர்.
கொலையாளி ஆக்கிய ஏமாற்று காதல்
கடலூர் அண்ணாமலை நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய காதலி வனிதா கைது செய்யப்பட்டார். கணேசன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், தனது கணவரிடமிருந்து தான் விவாகரத்து பெற்றதாகவும், பின்னர் கணேசன் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு பெண்ணை திருமணம் செய்து, தனது வாழ்க்கையைக் கெடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாகவும் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் துப்பாக்கி முனையில் 22 வயதுப் பெண் பலாத்காரம்
டெல்லியில் துப்பாக்கி முனையில் காரை நிறுத்தி, பெண்ணை பலாத்காரம் செய்து ரூ.5 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மதுராவில் வசிக்கும் அந்தப் பெண், கர்காவ்னில் இருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளார். தேசிய நெடுஞ்சாலை எண் 8ல் அவர் தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்ததாகவும், அவர் தன்னிடம் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்துக் கொண்டதாகவும், அவரை பாலியல் பலாத்காரம் செய்து காரில் தப்பிவிட்டதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.