அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

நீதிபதி லஹோதிக்கு 6 கேள்விகள்: சர்ச்சை முற்றுகிறது!

220px-Markandey_katju
மார்க்கண்டேய கட்ஜூ

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்னர் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சியின் நிர்பந்தம் காரணமாக, குற்றச்சாட்டுக்கு ஆளான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, புதிய பதிவை எழுதி சர்ச்சையை நீட்டித்திருக்கிறார்.

சர்ச்சைக்குரிய அந்தப் பதவி நீட்டிப்பை வழங்கத் துணைபோனவர்கள் என கட்ஜு குற்றம்சாட்டிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி. லஹோதி வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் தாம் தவறு செய்யவில்லை என இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தெரிவித்திருந்தார். இதற்கு தன்முடைய வலைத்தளத்தின் எதிர்வினை ஆற்றியிருக்கும் மார்க்கண்டேய கட்ஜூ, லஹோதிக்கு ஆறு கேள்விகள் என்று தலைப்பிட்டு ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அது பின்வருமாறு…

நீதிபதி லஹோதிக்கு சில கேள்விகள்

1. சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் மீதான புகார்கள் தொடர்பாக நான் முதன் முதலில் சென்னையில் இருந்து லஹோதிக்குக் கடிதம் எழுதியதுடன், அக்கடிதத்தில் அந்தக் கூடுதல் நீதிபதி தொடர்பாக ரகசிய உளவுத் துறை விசாரணை அறிக்கை பெறுமாறு வலியுறுத்தினேன். மேலும், தில்லியில் லஹோதியை சந்தித்து எனது கோரிக்கையை மீண்டும் வற்புறுத்தினேன். அது உண்மையா, இல்லையா?

2. எனது கோரிக்கையின்படி, அந்தக் கூடுதல் நீதிபதி தொடர்பாக ரகசிய உளவுத் துறை விசாரணைக்கு லஹோதி உத்தரவிட்டது உண்மையா, இல்லையா?

3. டெல்லியில் லஹோதியை நேரில் சந்தித்த பிறகு, சென்னை திரும்பிய என்னை, அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் தெரிவித்த புகார்கள் அனைத்தும் உண்மை என ரகசிய உளவு விசாரணையில் தெரிய வந்ததாகக் குறிப்பிட்டது உண்மையா, இல்லையா?

RC-Lahoti
ஆர்.சி. லஹோதி

4. உளவு அறிக்கையில் கூடுதல் நீதிபதிக்கு எதிரான தகவல்கள் இடம் பெற்றிருந்ததால், நீதிபதிகள் தேர்வுக் குழுவுக்கு தலைமை தாங்கிய அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான லஹோதி, அக் குழுவில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் சபர்வால், ரூமா பால் ஆகியோர் மத்திய அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில், கூடுதல் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததே? அது உண்மையா, இல்லையா?

5. இந்த பரிந்துரையை செய்த பிறகு, தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த மற்ற இரு நீதிபதிகளைக் கலந்தாலோசிக்காமல், லஹோதி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், கூடுதல் நீதிபதிக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு அளிக்கலாம் என்று பரிந்துரை செய்தது உண்மையா, இல்லையா?

6. மத்திய உளவு அறிக்கையில் முரண்பட்ட தகவல் இடம் பெற்ற பிறகும், ஊழல் புகாருக்கு ஆளான நீதிபதிக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்க லஹோதி பரிந்துரை செய்தது ஏன்?’
என்று கட்ஜு எழுதியுள்ளதோடு, இப்போது இந்த விவகாரங்களை சொல்வதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்படுவதற்கான காரணத்தை சொல்லியிருக்கிறார். தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சில தமிழர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய அனுபவங்கள் பற்றி கேட்டதாகவும் அதை எழுதும்போது அப்போது நடந்த இந்த விவகாரங்கள் தனக்கு நினைவில் வந்ததாகவும் எழுதியிருக்கிறார்.

Advertisements

1 thought on “நீதிபதி லஹோதிக்கு 6 கேள்விகள்: சர்ச்சை முற்றுகிறது!”

  1. நீதி மன்றமும் சரி நீதிபதிகளும் சரி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லவே அல்ல. ஓய்வு பெற்ற பின்னரோ பதவியைத் துறந்துவிட்டோ அரசியலில் குதிக்கும் நீதிபதிகளின் கடந்தகாலத் தீர்ப்புகளை மறு பரிசீலனை செய்ய முடியுமா ? அவர்கள் கடந்த காலத்தில் கட்சிகளோடு ரகசிய உறவு கொண்டிருந்தார் என்பதையும் அதற்கொப்பவே தீர்ப்புகள் வழங்கினார் என்பதையும் மறுக்க முடியுமா ? இந்த வகையில் பாஜக பக்கம் சாய்ந்தவர்களே அதிகம் என்பதையும் ; அவர்கள் மதவாத சக்திகள் மகிழவே தீர்ப்புகள் வழங்கினார் என்பதையும் மறக்க இயலுமா ? இது போல் அரசு உயர் அதிகாரிகள் பதவியிலிருந்து போனபின் யோக்கிய வேடமிட்டு எழுதுவதெல்லாம் நம்பத்தகுந்ததா ? உண்மையில் மனச்சாட்சிக்கு இடமளிப்பவரெனின் தவறை தடுக்க வேண்டும் இல்லையேல் அப்போதே பதவி விலகியிருக்க வேண்டும் . எல்லா கொடுமைக்கும் துணை போய்விட்டு – பதவி சுகபோகத்தை முழுமையாக அனுபவித்துவிட்டு அப்புறம் உத்தம வேடமிடும் அயோக்கியர்கள் யாராக இருப்பினும் அவர்களை சமூகம் புறந்தள்ளவேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s