குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் மேலாக சிறைக் கைதிகளை அடைத்திருப்பவதால் இந்திய சிறைச்சாலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜூ, மக்களவையில் இதுகுறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டார். அதன்படி 3,43,169 கைதிகள் இருக்க வேண்டிய சிறைச்சாலைகளில் 3,85,135 பேர் அடைக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக திகார் சிறைவளாகத்தில் உள்ள 10 சிறைச்சாலைகளில் மே 2014 கணக்கின்படி 14,048 பேர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவு 6250 பேர் மட்டுமே. விசாரணையில் உள்ள கைதிகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் அதேபோல் பிணையில் செல்வதற்கான வழிகாட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.